ஐதேக மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் தேர்வு இன்று

வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான எதிர்கட்சித் தலைவர்களை தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சை இன்று (14) இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இந்த நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சந்திம கமகே மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோருக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.

சப்ரகமுவ மாகாணத்தில் துசித்த விஜேமான்ன, ஹசித மொஹந்திரம் மற்றும் ஏ.ஏ.விஜேதுங்க ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

எதிர்கட்சித் தலைவர் பதவி நியமனத்தில் பூரண அதிகாரம் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply