தீவிற்கு உரிமை கோரி சீனா – ஜப்பான் மோதல்
சீனாவும் – ஜப்பானும் உரிமை கோரி வருகின்ற தீவுப் பகுதிக்கு சீனாவின் ஆறு யுத்தக் கப்பல்கள் சென்றுள்ன.
டியாயு என சீனாவாலும், செனகாகு என ஜப்பானாலும் அழைக்கப்படுகின்ற இந்த தீவு தொடர்பில் தொடர்சியாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் சீனாவின் யுத்த கப்பல் அங்கு சென்றுள்ளமை மீண்டும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கப்பல்களை அவதானித்த ஜப்பானிய யுத்த கப்பல்கள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, சீனாவின் இரண்டு கப்பல்கள் மாத்திரம பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீவுக் கூட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மூன்று தீவுகளை அதன் உரிமையாளரிடம் இருந்து கொள்வனவு செய்ய ஜப்பான் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சீனாவின் யுத்த படகுகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply