சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் கல்வீச்சில் இறங்கினர். இதையடுத்து பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

இந்தப் போராட்டம் மற்றும் கல்வீச்சு காரணமாக அண்ணா சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இஸ்ரேலிய அமெரிக்கர் ஒருவர் இஸ்லாமியர்கள் குறித்து எடுத்துள்ள திரைப்படத்தில் இஸ்லாமையும், இஸ்லாமியர்களையும் அவமதித்துள்ளதாக இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லிபியாவில் வெடித்த பெரும் கலவரத்தில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டார். மேலும் 3 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். எகிப்திலும் பெரும் கலவரம் மூண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க திரைப்படத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து பெருமளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென சிலர் கல்வீச்சில் இறங்கினர். துணைத் தூதரக அலுவலகம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீஸார் அவர்களை அடக்க கடுமையாக போராடினர். பின்னர் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்தப் போராட்டம் காரணமாக அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply