இலங்கையில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் பிரதிநிதிகள் குழு நேற்று இரவு இலங்கையை வந்ததடைந்தது.

மனித உரிமைகள் ஆணையகத்தின் பசிபிக், வட ஆபிரிக்கா மற்றும் மத்தி பிராந்திய பிரதானி ஹெகி மெகாலி, அந்த ஆணைக்குழுவின் ஒக்தாரி சொலோரி மற்றும் அஸ்வா பெற்றா உள்ளடங்கலான குழுவினர், எதிர்வரும் 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பர் என  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக அரசாங்கத்திற்கு தொழில் நுட்ப ஆலோசனையை வழங்கும் நோக்கிலேயே இந்த குழு இலங்கை வந்துள்ளது.

அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை விஜயத்திற்கு முன்னோடியாக  இவர்களது விஜயம் அமைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply