பெருமளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானம்
பிரித்தானியா பெருமளவான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானிய அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் வாரங்களில் பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர்.
குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று விமானங்களில் இவர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
சித்திரவதைகளுக்கு உள்ளாகாதவர்களே நாடு கடத்தப்படுவதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், நாடு கடத்தப்படுவோர் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம், சித்திரவதைகளிலிருந்து விடுதலை ஆகிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு நாடு கடத்தப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளன.
பெருமளவிலான இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply