தமிழ்நாடு முகாமிலிருந்த இலங்கை அகதிகள் அறுவரை காணவில்லை
தமிழ்நாடு – ஓசூர், கெலவரப்பள்ளி இலங்கை தமிழர் முகாமில் இருந்து ஆறு பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதில், இருவரை மைசூர் மற்றும் இந்தோனேஷியாவில் பொலிஸார் மீட்டனர். ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை, இலங்கை தமிழர் முகாமில், 149 குடும்பத்தினர் வசிக்கின்றனர். முகாமை விட்டு வேலை நிமித்தமாக வெளியே செல்வோர் முகாம் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் வருகை பதிவேட்டில், செல்லும் இடம், நேரம், காரணம் ஆகியவற்றை எழுதி செல்ல வேண்டும்.
தற்போது, இலங்கையில் அமைதி திரும்பி வருவதால், முகாமில் வசிப்பர்கள், தகவல் தெரிவிக்காமல் முகாமில் இருந்து தப்பி சென்று வருகின்றனர். சில மாதத்துக்கு முன், அவுஸ்திரேலியா அரசு, இலங்கை தமிழர்களை தங்கள் நாட்டுக்கு வருமாறும், மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் ஊதியத்துடன் வேலை தருவதாகவும் உறுதியளித்தது.
தமிழத்தின் பல முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், அவுஸ்திரேலியா செல்லும் ஆர்வத்தில் அரசு அனுமதி பெறாமல் முகாம்களை விட்டு மாயமாகி வருகின்றனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி முகாமில், ஒரு வாரத்துக்கு முன், முகாமை சேர்ந்த தம்பியா, 19, இன்பன், 35, நவநீதன், 25, ராஜேந்திரன், 36, அமுதன், 38, உள்ளிட்ட, ஆறு பேர் மாயமாகினர். தகவல் அறிந்த க்யூ பிரிவு பொலிஸார், அவர்களை தேடி வந்தனர்.
நவநீதனை க்யூ பிரிவு பொலிஸார், கர்நாடகா மாநிலம் மைசூரில் மீட்டனர். இந்தோனேஷியாவில் அமுதனை மீட்டனர். மற்றவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை. மீட்கப்பட்ட நவநீதனை, க்யூ பிரிவு பொலிஸார், கெலவரப்பள்ளி அணை முகாமில் சேர்த்தனர். அமுதனை எங்கு வைத்துள்ளனர் என தெரியவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply