அமெரிக்காவில் நிறைவேற்ற முயற்சிக்கும் தீர்மானத்திற்கு எதிராக அரசு ஆதரவு திரட்டுகிறது
அமெரிக்காவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புக்களுக்கு எதிராக அதரவு திரட்டும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
நட்புறவான அமெரிக்க காங்கிரஸ் செனட்டர்களை பயன்படுத்தி குறித்தத் தீர்மானத்தை முறியடிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஏழு காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்து எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீர்மானம் தொடர்பான வரைவு யோசனைத்திட்டம் கடந்த 7ம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்மென கோரியுள்ளனர்.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கம் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய ஏற்கனவே இலங்கை அரச ஆதரவு காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தீர்மானத்தினால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்ற போதிலும், தீர்மானத்தை முறியடிக்க நட்புறவான காங்கிரஸ் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply