தவறான புரிந்துணர்வை அச்சுறுத்தலால் தீர்க்க முடியாது: ஜேர்மனி
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதுவர் உள்ளிட்ட, வெளிநாட்டுத் தூதுவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி கூறியிருப்பது தம்மைத் திருப்திப்படுத்தவில்லையென பேர்லின் தெரிவித்துள்ளது.
தறவான புரிந்துணர்வுகள் ஏற்பட்டால் அது பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்படலாம். ஆனால் அச்சுறுத்தல் மூலம் தீர்க்க முடியாது என ஜேர்மன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
பொறுப்பற்ற வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு, அவர்களுக்கு புத்துயிரளிக்க முயற்சிக்கும் வெளிநாட்டுத் தூதுவர்கள், செய்தி முகவர்கள் அனைவரும் நாட்டைவிட்டுத் துரத்தப்படுவார்கள் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கொழும்பு ஊடகமொன்றிடம் கூறியிருந்தார்.
குறிப்பாக ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளின் தூதுவர்கள் வெளியேற்றப்படுவதுடன், வெளிநாட்டு செய்திச் சேவைகளான பி.பி.சி., அல்ஜெசீரா மற்றும் சீ.என்.என். ஆகியவையும் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் இறுதிச் சடலங்கில் கலந்துகொண்ட இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், அங்கு உரையாற்றும் போது கூறியிருந்த கருத்துக்கள் குறித்து அவர்மீது, ஜேர்மன் விசாரணைகளை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply