தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலில் இளவரசர் ஹாரிக்கு ஆபத்துக்கள் ஏதும் இல்லை
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டு தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகின்றனர். வருகிற 2014ஆம் ஆண்டுக்குள் அங்கிருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். இருந்தாலும், அவர்கள் மீது தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹெல்மன்ட் மாகாணத்தல் பாஸ்டியன் என்ற இடத்தில் ஹநேட்டோ’ படைகளின் முகாம் உள்ளது. நேற்று இரவு 9மணி அளவில் அங்கு தலிபான் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள். ராக்கெட் குண்டுகள், மோட்டார் குண்டுகளை வீசி தாக்கினார்கள்.
மேலும் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2பேர் உயிரிழந்தனர். அமெரிக்க வீரர்கள் 5பேர் காயம் அடைந்தனர். மேலும் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஹநேட்டோ’ படையில் இங்கிலாந்து ராணுவமும் இடம் பெற்றுள்ளது. எனவே, இளவரசர் ஹாரியும் ஆப்கானிஸ்தான் சென்று தீவிரவாதிகளுடன் போரிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பாஸ்டியன ஹநேட்டோ’ ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது இளவரசர் ஹாரியும் அங்கு இருந்தார். இந்த தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த தகவலை ஹநோட்டோ’வின் சர்வதேச பாதுகாப்பு படை அதிகாரி மார்டின் கிரிக்டன் உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள ராணி எலிசபெத்தின் பேரனும், இளவரசர் சார்லசின் மகனுமான ஹாரியை கொல்வோம். இல்லது கடத்துவோம் என தலிபான்கள் கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அதை நிறைவேற்ற இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிகிறது.
மேலும் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து எடுக்கப்பட்ட சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகவும் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply