முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு அரசுக்கே

கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்க அரசாங்கத்துக்கு சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸ் தமது ஆதரவை வழங்கும் என்று முஸ்லிம் காங்கிரிஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிழக்கு மாகாண சபை தொடர்பில் இடம்பெற்று வருகின்ற பேச்சுவார்த்தைகளில், அங்கு அமைக்கவுள்ள மாகாண சபையின் அதிகாரபகிர்வு தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் முதலமைச்சர் மற்றும் ஏனைய இரண்டு மாகாண அமைச்சுக்களை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்இ கிழக்கு மாகாண சபையில் ஒரு அமைச்சுப் பதவிஇ கட்டாயமாக சிங்கள உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் அக்கீம் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போது, மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபை உறுப்பினர்கள் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் பின்னர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் சுசில் பிரேமஜெயந்த. அமைச்சர் பசில் ராஜபக்ஷ போன்றோருடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply