யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை : ஐ.நா பிரதிநிதிகள்
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இரண்டு விசேட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்யும் நோக்கிலேயே தமது விஜயம் அமைந்துள்ளது என அந்தப் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர். மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகளான கெதி மெகெலி மற்றும் ஒஸ்கார் சொலிரா ஆகியோர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடத்தல்கள் காணாமல்போதல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஐ.நா பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply