பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம்: மதிமுக மாநாட்டில் தீர்மானம்

பொதுவாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழீழம் அமைப்பதை ஒரே இலக்காகக் கொண்டு உலகம் முழுவதும் ஆதரவை திரட்டும் பணியில் ஈடுபடுவோம் என்று மதிமுகவின் கரூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரூரில் நடைபெற்ற மதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பொது வாக்கெடுப்பு மூலம் இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழத்தை அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் இதற்கான ஆதரவை திரட்டுகின்ற பணியில் மதிமுக ஈடுபடும்.

இலங்கை ஜனாதிபதி சாஞ்சிக்கு வர அனுமதிக்கக் கூடாது. மீறி வந்தால் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் திகதி வைகோ தலைமையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக சாஞ்சிக்கு புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் கண்ணீரைத் துடைக்கவும், அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கவும், திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தி, மீனவர் வாழ்வுரிமை மாநாடு வரும் நவம்பர் 24-ந் திகதி தூத்துக்குடியில் நடத்தப்படும். என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மதிமுக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply