மதத்தை இழிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோவை தடைசெய்ய முடியாது!

உலகளாவிய ரீதியில் அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்களைத் தோற்றுவித்துள்ள வீடியோவை தடைசெய்ய கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பயன்பாடு காரணமாக லிபியா மற்றும் எகிப்தைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் குறித்த வீடியோவை தடைசெய்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

மதத்தை இழிப்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள குறித்த வீடியோ காட்சி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்குதலுக்கு இலக்காயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் அழுத்தங்களால் அல்லாது உள்நாட்டு சட்டங்களுக்கு அமையவே குறித்த வீடியோவை எதிர்காலத்தில் கட்டுப்படுத்துவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே குறித்த வீடியோ காட்சியுடன் தொடர்புடைய நபர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

வங்கி மோசடி தொடர்பாக குற்றவாளியாக காணப்பட்ட 55 வயதான ஒருவரை இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply