இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழமே! தமிழ்நாட்டு அரசியல் வாதிகள்
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனி ஈழமே என்று ம.தி.மு.க தெரிவித்துள்ளது.
இதன்பொருட்டு ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பின் கீழ் பொதுமக்கள் கருத்துக்கணிப்பு ஒன்றும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அந்த கட்சி யோசனை முன்வைத்துள்ளது
கரூரில் இடம்பெற்ற தமிழ் இயக்கத்தின் ஆண்டு விழாவில் உரையாற்றிய, மதிமுக உயர்மட்ட குழு உறுப்பினர் செந்தில் அதிபன் மற்றும் கட்சியின் பேச்சாளர் நான்மாறன் ஆகியோர் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளனர்
ஐக்கிய நாடுகள் சபையில் தன்னை அரை மணி நேரம் பேசவிட்டால் தம்மால் தனி ஈழத்தை அடைந்துவிட முடியும் என்று நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஆனந்த விகடன் வார இதழுக்கு சீமான் அளித்திருக்கும் செவ்வியொன்றிலேயே இந்தவிடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள் என்று கேட்கப்பட்ட போது,
பிரதமராவது தனது கனவல்ல என்றும் 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக் கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே தமது ஒரே கனவு என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா என்றும் அவரிடம் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்..
அதற்கு பதிலாக இல்லை என்று தெரிவித்த அவர் ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்து போவதற்கான காரணங்களை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று மட்டும் தாம் கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply