விடுதலைப்புலிகளின் தலைவர் முன்னர் மறைந்திருந்த இடத்தை பிடித்ததாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது
வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு மற்றும் முல்லைத்தீவு நந்திக்கடல் பிரதேசத்தில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், பிரமந்தகுளம் என்னுமிடத்தில் 2 ஏக்கர் பரப்பு காணியில் நிலத்திற்கடியில் இரண்டு மாடிக்கட்டிடத்தில் அமைந்திருந்த குளிரூட்டி வசதியுடன் கூடிய இடம் ஒன்றை இராணுவத்தினர் தம்வசப்படுத்தியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.
இது விடுதலைப் புலிகளி்ன் தலைவர் மறைந்திருந்த இடம் என்றும், இந்த இடத்தின் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டிருந்ததாகவும் பாதுகர்பபு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. கடும் சண்டைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட இந்த இடத்தில் நடத்தப்பட்ட தேடுதலின் போது பலவிதமான பொருட்களையும் விடுதலைப்புலிகளின் 12 சடலங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, உடையார்கட்டுக்குளம் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகள், படையி்னர் மீது எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இந்தப் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், இங்கு நடைபெற்ற சண்டைகளில் சில இராணுவத்தினர் காயமடைந்ததுடன், காணாமல் போயுள்ள 5 இராணுவத்தினரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply