பாகிஸ்தான் உளவுப் பிரிவில் இலங்கைத் தமிழர்கள் ?
இலங்கைத் தமிழர்கள் பாகிஸ்தான் உளவுப் பிரிவில் உள்வாங்கப்படுவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ, இந்தியாவில் உளவுப் பணிகளை மேற்கொள்ள இலங்கைத் தமிழர்களை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
தாமீம் அன்சாரி என்ற நபரை அண்மையில் இந்திய காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திய போது இந்த உண்மை அம்பலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் பாகிஸ்தான் உளவுப் பிரிவிற்காக கடமையாற்றி வருகின்றமை புலனாகியுள்ளது.
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை உளவுத் தகவல்களை திரட்ட பயன்படுத்திக் கொள்வது சுலபமானது என்ற காரணத்தினால் பாகிஸ்தான் இவ்வாறு இலங்கையர்களை பயன்படுத்தி வருவதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply