வன்னியில் மீட்கப்பட்ட பிரதேசங்களில் 20 பொலிஸ் நிலையங்களை அமைக்க முடிவு

மீட்கப்பட்ட வன்னி பிரதேசத்தில் 20 பொலிஸ் நிலையங்களை அமைக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர கூறினார்.வன்னி பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :-

மீட்கப்பட்ட பகுதிகளில் நிலக் கண்ணி அகற்றும் பணிகள் தற்பொழுது முன்னெடு க்கப்படுகிறது. அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அம்ச மாகவே பொலிஸ் நிலையங்களை ஏற்ப டுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதி யின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின் னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

எந்தெந்த இடங்களில் பொலிஸ் நிலையங்களை அமைப்பது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப் படவில்லை என்று கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

இதேவேளை மீட்கப்பட்ட மன்னார் மாவட்டத்தில் 22 பொலிஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டதோடு இதுவரை ஏழுக்கும் அதிகமான பொலிஸ் நிலையங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply