மீண்டும் முதலமைச்சர்! ஆசை நிறைவேறவில்லை – பிள்ளையான்
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக மீண்டும் வருவதற்கு எதிர்பார்த்திருந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஐமசுமு மேலும் 3 ஆசனங்களை வென்றிருந்தால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எனினும் தனக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி கிடைத்துள்ளதால் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென முன்னின்று செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் இனவாதத்தை தூண்டி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்தது சரியா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
கிழக்கில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் இனவாதத்தை தூண்டி செயற்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளதால் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவுள்ளதாக சிவநேசதுறை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபடும் எனவும் அதனை விரிவுபடுத்துவது தனது நோக்கம் எனவும் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply