நௌரு தீவை முதன் முதலாக இலங்கை அகதி ஒருவர் நிராகரிப்பு

அவுஸ்ரேலியாவின் நௌரு தீவில், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட முதலாவது வெளிநாட்டவராக இலங்கையர் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 24 பேர், இன்று நௌரு தீவுக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் குறித்த இலங்கையர் இந்த அகதி முகாமை நிராகரித்தார்.

இவ்வாறு நௌரு தீவுக்கு கொண்டுச் செல்லப்பட்டவர்களில் 20 ஈரானியர்களும், 4 இலங்கையர்களும் அடங்குகின்றனர்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் வெளிநாட்டவர்களை நௌரு தீவுக்கு கொண்டுச் செல்லவது என அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்தது.

கடந்ததினம் அவுஸ்ரோலியாவுக்கு சட்ட விரோதமாக சென்ற 18 இலங்கையர்களையும், கிரிஸ்மஸ் தீவில் இருந்து நௌரு தீவுக்கு மாற்ற அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்தது.

இதனடிப்படையில் முதல்தொகுதியாக 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 24 பேர் அங்கு அனுப்பட்டனர்.
இவ்வாறு அனுப்பட்ட இலங்கையர் ஒருவரே, அங்கு குடியமர மறுத்துள்ள நிலையில் நாடு திரும்பவுள்ளார்.

இதேவேளை மோதல் சம்பவங்கள் பாரியளவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தானில் இருந்தே அதிக அளவிளான அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கி செல்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் தற்போது, இலங்கையில் இருந்தே அதிகளவான அகதிகள் அவுஸ்ரேலியா செல்வதாக புதிய புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய இலங்கையில் இருந்து இந்த வருடம் 3 ஆயிரத்து 536 பேர் அகதிகளாக சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து செல்லும் அகதிகளை விட அதிக அளவிலான இலங்கையர்கள் அங்கு சென்றுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply