இலங்கையர் சிலர் நவுரு தீவில் இருந்து நாடு திரும்ப விருப்பம் தெரிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக சட்டவிரோதமாக கடல்வழியாக படகுகளில் பயணித்த சில இலங்கையர் நவுரு தீவில் தங்கவைக்கப்பட்டதை அடுத்து அவர்களுள் சிலர் நாடு திரும்ப விருப்பம்கொண்டுள்ளனர்.அவுஸ்திரேலியாவுக்கு கடல்வழி செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது. இவ்வாறு கடல்வழியாக செல்லும்போது இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட போதிலும், சிலர் கடலில் உயிரிழந்தாலும், அவுஸ்திரேலியப் பயணத்தை மக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றனர்.இந்நிலையில் அவுஸ்திரேலிய அரசு சிலரை நாட்டுக்கு திருப்பி அனுப்பிய போதிலும், சிலரை நவுரு தீவுகளில் தங்க ஏற்பாடும் செய்துகொடுத்தது.இவ்வாறு நவுரு தீவுகளில் தங்க வைக்கப்பட்ட சிலர் தாம் நாட்டுக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் நவுரு தீவுகளில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.தொலைக்காட்சி, திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள், இணையத் தொடர்பு, தொலைபேசி அழைப்பு வசதிகள் மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகமாக நித்திரைகொள்ளல், சாப்பிடுதல், ஏனையோருடன் பழகுதல், வகுப்புகள், கிரிக்கெட், கரப்பந்தாட்ட விளையாட்டு என இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக இத் தஞ்சக் கோரிக்கையாளர்களை கவனிக்கும் செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் கூறினர்.இவர்களுக்கு கையடக்கத் தொலைபேசிகள் வழங்கப்படவுள்ளதாக செஞ்சிலுவைச் சங்க உத்தியோகஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் புகலிடம் கோரிய சிலரை அவர்களது சுயவிருப்பின் பேரில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் அவ்வதிகாரி கூறினார்.இவர்களது மன உறுதி மோசமாக இல்லை எனவும், புதிய சூழலுக்கு பழக்கப்பட கொஞ்ச காலம் தேவைப்படும் எனவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.பலர் தமது சோகக்கதைகளை பகிர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply