பதில் அதிபர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை ஏற்க மறுக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்
சேவை அமைப்பு யாப்பை மீறி பதில் அதிபர்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலையில் சிரேஸ்ட ஆசிரியர்கள் இருக்கையில் அதிபருக்காக பதில் கடமையாற்றியவர்களை அதிபர் சேவை யாப்புக்கு மாறாக இணைத்துக் கொள்ள எதிர்வரும் 27ம் திகதி கல்வி அமைச்சால் நேர்முகப் பரீட்சை நடத்தப்படவுள்ளது.
கல்வி அமைச்சு விடுத்த 2000/34 சுற்றறிக்கையின் மூலம் பதில் அதிபர்களை இணைத்துக் கொள்ள முடியாது. இதனை மீறி கல்வி அமைச்சு செயற்படுகிறது.
இந்த நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமது சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதனையும் மீறி நியமனம் இடம்பெறுமாயின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply