இலங்கையின் 61வது சுதந்திரதினத்தன்று வான் பாதுகாப்பு: விமானப்படை அறிவிப்பு
இலங்கையின் 61வது சுதந்திரதினம் நாளை புதன்கிழமை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வழமையைவிட இம்முறை தரை, கடல் மற்றும் ஆகாயமார்க்கமான பாதுகாப்பை அதிகரித்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் பிரதான சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெறும் சமயம் வான் பாதுகாப்பை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக விமானப்படைப் பேச்சாளர் ஜனக நாணயகார கூறினார்.
சுதந்திரதின நிகழ்வுகள் நடைபெறும் சமயம் எம்மலான அனைத்து வான் பாதுகாப்பையும் பயன்படுத்துவோம் என அவர் கூறினார்.
தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு வழங்கும் வகையில் விமானப்படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என்றும் விமானப்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கொழும்பு அல்லது புறநகர் பகுதிகளில் முக்கியஸ்தர்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் விமானங்களைப் பயன்படுத்தக்கூடும் என புலனாய்வுத் தகவல்கள் தமக்குக் கிடைத்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர்.
சுதந்திரதினத்தை முன்னிட்டு 10,000 பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அதேநேரம், சுதந்திரதினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சிக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வன்னியில் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் விடுதலைப் புலிகள் சுதந்திரதின நிகழ்வுகளைக் குழப்ப முயற்சிக்கலாம் என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply