கூடங்குளம் அணு மின்நிலையத்தினால் இலங்கைக்கு பாதிப்புக்கள் எதுவுமில்லை
இந்தியாவின் தமிழகத்திலுள்ள கூடங்குளம் அணு மின்நிலையமானது சுற்றாடலுக்கோ அல்லது அண்டை நாடான இலங்கைக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட வில்லையென இந்தியா அறிவித்துள்ளது.
சுற்றாடல், பொது மக்கள், அனு மின்நிலையப் பணியாளர்கள் மற்றும் அண்டை நாடான இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே இதன் செயற்பாடுகள் காணப்படும்.
அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
கூடங்குளம் அணுமின்நிலைய செயற்பாடுகளை ஆரம்பிப் பதற்கு முன்னர் பரீட்சார்த்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது சுற்றாடலில் கதிர்வீச்சின் செறிவு உளிட்ட அனைத்தும் பரிசீலிக்கப்பட்டன.
அணு சக்தி கட்டுப்பாட்டு சபை இதனை அவதானித்து பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து அணு மின்உற்பத்தி நிலையங்களும் அணுக் கதிர்கள் விரயமாவதைக் கட்டுப்படுத்தும் வகையில், பாதுகாப்பான முறைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.
அணு மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் சர்வதேச தரத்திலேயே மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு, கதிர்வீச்சுத் தாக்கம் தொடர்பான விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு இலங்கை அதிகாரிகள் குழுவொன்று எதிர்வரும் மாதங்களில் இந்தியா செல்லவுள்ளது. இக்குழு கதிர்வீச்சுத் தொடர்பிலும் ஆராயும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply