2013ம் நிதி ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவுக்கு அமைச்சரவை அனுமதி

2013ம் நிதி ஆண்டுக்கென நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்பித்த நிதி ஒதுக்கீட்டு சட்ட வரைவுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

ஒவ்வொரு அமைச்சு, வரி பிறநடுநிலை வியடங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு யதார்த்தமான வரவு – செலவுத் திட்டத்தை உருவாக்கும் வகையில் குறித்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-2015 நடுத்தர கால செலவு கட்டமைப்பு அடையாளம் முன்னுரிமைகள் மற்றும் ஏற்கனவே தொடங்கியது மற்றும் நடந்து வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்தல் குறித்து இதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2013ல் அரசின் செலவு ரூ. 2520 பில்லியன் என கணிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் என்பவற்றை 7% பேண எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்ட முதல் வாசிப்பு ஒக்டோபர் 9ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில் இரண்டாம் வாசிப்புக்கென வரவு – செலவுத் திட்ட நவம்பர் 8ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply