இலங்கையுடன் விரிவான உறவுகளைப் பேண சீன விருப்பம்
இலங்கையுடன் இன்னமும் விரிவான உறவுகளைப் பேண சீன அசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியன்ஹாவோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் சீனாவும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் அற்புதமான திறன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரே சீனா என்ற கோட்பாட்டை இலங்கை மதிப்பதாக சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சீனா வழங்கிய உதவிகள் அளப்பரியது எனவும், அதற்காக நன்றி பாராட்டுவதாகவும் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply