நைஜீரிய வௌ்ளப்பெருக்கின் உச்சம்: 140 பேர் பலி! 10,000 பேர் இடப்பெயர்வு

நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.

மத்திய நைஜீரியவில் கடந்த ஒருவாரமாக பெய்த மழையால் ஏற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கால், கிராமங்களில் பலர் தங்கள் வீடுகளின் கூரையில் அமர்ந்து நிவாரணத்தை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், கடந்த ஜூலை மாதத்திலிருந்து இதுவரை 140 பேர் வெள்ளத்தால் பலியாகியுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக பல்வேறு முகாம்களை ஏற்பாடு செய்துள்ள மீட்புக் குழுவினர், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக படகு சேவையை அதிகப்படுத்தியுள்ளனர்.

போதிய உணவு மற்றும் இருப்பிட வசதியின்றி தவித்து வரும் பெரும்பாலான மக்களை மீட்பதற்கான முயற்சியில் தனியார் இயக்கங்களும் ஈடுபட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply