அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 77 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 77 பேர் இன்று (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொட்டாவுவாவ கடற்பரப்பிலிருந்து 20 மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவர்கள் நிர்சாணி என்ற படகின் மூலமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 61 தமிழர்கள், 14 சிங்களவர்கள் மற்றும் 2 முஸ்லிம்கள் அடங்குகின்றனர்.
இவ்வாறு பயணித்தவர்களில் 75 ஆண்களுடன் பெண் ஒருவரும் சிறுவர் ஒருவரும் இருந்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, புத்தளம், கொழும்பு, உடப்பு, மன்னார், சிலாபம் மற்றும் கற்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply