நேபாள விமான விபத்தில் பயணிகள் 19 பேரும் பலி

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து கிளம்பிய ஒரு சிறு விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த 19 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

மலைப்பாதையில் நடக்க வந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு காத்மாண்டுவில் இருந்து சிறிது தொலைவில் எவரெஸ்ட் சிகரம் அருகில் அமைந்திருக்கும் லுக்லா என்ற இடத்துக்கு இந்த விமானம் கிளம்பியிருந்தது.

இந்த விமானத்தில் இருந்தவர்களில் ஏழு பேர் பிரிட்டிஷ் பிரஜைகள், ஐந்து பேர் சீனர்கள், ஏனையோர் நேபாளிகள் ஆவர்.

கீழே விழுந்து நொறுங்கியது சீதா ஏர் என்ற நிறுவனத்தால் இயக்கப்பட்டுவந்த டொர்னியர் ரக விமானம் ஆகும்.

விமான நிலையத்துக்கு அருகில் ஓடும் ஆறு ஒன்றில் இது கீழே விழுந்து நொறுங்கியது.

விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் ஒரு பறவை வந்து விமானத்தில் அடித்திருந்ததாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அறிவித்திருந்தார் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

நேபாளத்தில் கடந்த இரண்டு வருடங்களில் உயிர்ப்பலி வாங்கியுள்ள ஆறாவது விமான விபத்து இதுவாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply