இரும்புகளை விற்று வாழ்வாதாரம் தேடும் வன்னி மக்கள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் இரும்புகளை விற்று வருமானம் தேடும் அவல நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இறுதிப்போர் நடந்த இடத்தில் மீள்குடியேறிய மக்கள் இரும்புகளை சேகரித்து விற்று தமது வருவாயைத் தேடி வாழும் அவல நிலையிலுள்ளனர்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் இரும்பு சேகரித்து விற்று வாழுகின்றனர். வன்னியில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட வகனங்களின் இரும்புகளே இவ்வாறு சேகரிக்கப்பட்டு தென்னிலங்கை வியாபாரிகளிடம் விற்கப்படுகிறது. இறுதிப்போர் நடந்த இடமெங்கும் இரும்புகள் காணப்படுகின்றன.
இவற்றின் மூலம் அதிக வருமானம் ஈட்டுவதனால் பாடசாலை மாணவர்கள்கூட பாடசாலை செல்லாமல் இரும்பு சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
போரினால் இடம்பெயர்ந்து அனைத்து சொத்துக்களையும் இழந்து மீள்குடியமர்ந்த நிலையில் தொழில் வாய்ப்பான்றி இடர்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் மிதிவெடி அபாயம் மிகுந்த இடங்களிலும்கூட மக்கள் இரும்புகளை சேகரிக்கச் செல்லுகின்றனர். இதனால் தமது அன்றாட வாழ்வினை ஓரளவு நகர்த்த முடிகிறது என்று இரும்பு சேகரிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply