ஜனாதிபதி தேர்தல்: கருத்துக் கணிப்புக்களில் தொடர்ந்தும் முதலிடத்தில் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நவம்பர் 6-ந் திகதி வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவும், எதிர்க்கட்சி சார்பில் மிட் ரோம்னியும் இருக்கிறார்கள்.

இதுவரையில் நடைபெற்ற முந்தைய கருத்து கணிப்புக்களில் ஒபாமாவுக்கு கூடுதல் ஆதரவு இருந்தது. வாக்களிப்பிற்கு இன்னும் 40 நாட்களே இருக்கின்றன.

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று இணையதளம் மூலம் புதிய கருத்து கணிப்பை நடத்தி அதன் முடிவை நேற்று வெளியிட்டது.

மொத்தம் 1,194 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். அதில் ஒபாமாவுக்கு 49 சதவீதம் வாக்குகளும் மிட் ரோம்னிக்கு 42 சதவீத வாக்குகளும் கிடைத்தன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply