தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு புதிய யோசனை

தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து படகுகளுக்கும் ஜிபிஎஸ் கருவி, வயர்லெஸ் வழங்கலாம் என இந்திய மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது.

5 கலங்கரை விளக்கங்கள், சர்வதேச கடல் எல்லை மீனவர்களுக்கு தெளிவாக தெரியும்படி பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க துப்பாக்கி வழங்க வேண்டும் என மதுரை சட்டத்தரணி பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வினோத்குமார் சர்மா, ஏ.செல்வம் ஆகியோர் முன்பு நேற்று நடந்தது.

மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட் ஜெனரல் வில்சன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக கடலோர பாதுகாப்பு படை இணை இயக்குனர் ஜெனரல் வர்க்கீஸின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

தமிழக மீனவர்கள் பாதுகாப்புக்கு பாக் ஜலசந்தி பகுதியில் கூடுதல் நடவடிக்கைகள் எடுககப்பட்டுள்ளன. நாட்டு படகு, விசைப்படகு மற்றும் கட்டுமரங்களுக்கு தலா ஒரு ஜிபிஎஸ் கருவி மற்றும் வயர்லெஸ் கருவி வழங்கலாம். இக்கருவிகள் கடலில் இருக்கும் போது உதவிகள் பெற பயன்படும்.பாக் ஜலசந்தி பகுதியில் உள்ள 5 கலங்கரை விளக்கங்கள் பராமரிக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி இல்லாத படகுகள் சர்வதேச கடல் எல்லை தெளிவாக தெரிந்துகொள்ளும் வகையில் எல்லையில் விளக்குகள் ஒளி விழச்செய்யப்படும்.

பகல் நேரங்களில் சர்வதேச கடல் எல்லையை தெரிவிக்க கடலில் ஒளிரும் மிதவைகள் நிறுவப்படும். ஜிபிஎஸ் கருவி மூலம் கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் துல்லியமாக கண்காணிக்கலாம்.

அதோடு கடல் வானிலை நிலவரத்தையும் உடனுக்குடன் மீனவர்களுக்கு தெரிவித்து, உஷார்படுத்தலாம். வயர்லெஸ் கட்டுப்பாட்டு அறை உருவாக்கி, மீனவர்களுடன் தொடர்பில் இருக்கலாம். கடலோர பாதுகாப்பு மீட்பு படையினரை 1554 என்ற எண்ணில் வயர்லெஸ்சில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply