டெசோ தீர்மானத்துடன் மு.க.ஸ்டாலின் நியூயோர்க் செல்கிறார்

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்தது. இதில் இலங்கை தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததால். ஐ.நா சபையிடம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது தி.மு.க சார்பில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 3-ந் திகதி தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், வக்கீல் ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வற்புறுத்தி சிதம்பரத்தில் இருந்து திருச்சிக்கு திருமாவளவன் வேன் பயணம் செய்வதால் டெசோ கூட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையம் அக்டோபர், நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வு பொறுப்பை ஏற்க இருக்கும் இந்தியா, மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று 3-ந் திகதி நடக்கும் கூட்டத்தில் வற்புறுத்தப்படும் என்று தெரிகிறது.

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நாசபையில் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, ஆகியோர் அக்டோபர் 6-ந் திகதி நியூயோர்க் செல்கிறார்கள். அங்கு ஐ.நா.சபையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை அவர்கள் கொடுக்கிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply