இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி, வலைகளை அறுத்து எறிந்துள்ளனர். இதனால் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 800 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்திய-இலங்கை கடல் எல்லையில் அவர்கள் மாலை நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 3 ரோந்து கப்பல்களில் அங்கு வந்தனர்.

மீனவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறி கருங்கற்களை சரமாரியாக மீனவர்கள் மீது வீசி எறிந்தனர்.

மீனவர்கள் படகில் படுத்து கல் வீச்சிலிருந்து தப்பினர். இதையடுத்து தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.

இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த யாகுல அந்தோனி, பிச்சை இராமேஸ்வரத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம், வேலாயுதம் உள்ளிட்ட 10 படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலிலிருந்து தப்பி இரவோடு-இரவாக மீனவர்கள் இராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply