இலங்கை அகதிகளுடன் மேலும் இரண்டு படகு ஆஸியில் தஞ்சம்

இலங்கையர்கள் அடங்கிய மேலும் இரண்டு அகதி படகுகள் நேற்றைய தினம் அவுஸ்திரேலிய கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முதலாவது படகு 72 பேருடன் அவுஸ்திரேலியாவின் ஹார்வி குடாவில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளது.

63 பேரும் சென்ற மற்றுமொரு அகதி படகு கிறிஸ்மஸ் தீவின் கிழக்கு பகுதி கடற்பரப்பில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் தற்போது கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடையாளங்கள பரிசோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் தேசியம் குறித்து சரியாக அறிவிக்கப்படாத போதும், பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply