இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது ஏன் ?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டமைக்கான காரணங்களை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தமிழக அரசாங்கம் நேற்று சமர்ப்பித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தின் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன் போது தமிழக அரசாங்கம் தரப்பில் முன்னிலையான அதிகாரிஇ இந்த ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

இதில் தமிழ் தேசிய மீளமைப்பு குழு, தமிழ் நாடு விடுதலை முன்னணி, தமிழ் நாடு விடுதலை போராளிகள் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் குறித்த ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் இலங்கையில் பயிற்சி பின்னர் மீண்டும் தமிழகம் திரும்பி இருப்பதாகவும் இந்த ஆவனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளர் வை.கோபாலசாமியால் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை எதிர்வரும் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் கொடைக்கானலில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply