மன்னார் வைத்தியசாலையில் சிறீ-ரெலோ அமைப்பினர் இரத்ததானம்
வன்னியில் இடம்பெறும் யுத்தத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மேலதிக சிகிச்சைக்கு இரத்தத்தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் சிறீரெலோ அமைப்பினர் நேற்று மன்னார் வைத்தியசாலையில் அம்மக்களுக்காக இரத்த தானம் செய்துள்ளனர்.
மேலும் வன்னியில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வந்துள்ள மக்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாமிற்கு விஜயம் செய்த அவ்வமைப்பினர் அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளையும் விநியோகித்ததாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னிப்பிரதேசத்தில் நோய்யுற்று வவுனியா கொண்டுவரப்பட்டுள்ள மக்களுக்காக வடகிழக்கில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் சகல அரசியல் அமைப்புகளும் தங்களால் முடியுமான உதவிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply