மியன்மாரின் அடுத்த ஜனாதிபதி ஆன் சான் சூகி ?
மியன்மாரின் ஜனாதிபதியாக ஆன் சான் சூகியை ஏற்றுக் கொள்வதாக, தற்போதைய ஜனாதிபதி தென் செயின் தெரிவித்துள்ளார்.
பி.பி.சியிடம் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள் மியன்மாருக்கு பொறுத்தமான ஜனாதிபதி ஆன் சான் சூகியே என்று கருதுகின்றன. இதனை தாமும் ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வாக்களித்து அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், அதனை தாம் ஒப்புக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மியன்மாரில் எதிர்வரும் 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், ஆங்சாங் சூகி எதிர்கட்சியில் இருந்த போதும், நாட்டின் மீளமைப்பு நடவடிக்கைகளில் தங்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply