அனல் மின் உற்பத்திக்காக நாளாந்தம் 500 மில்லியன் ரூபா செலவு

அனல் மின் உற்பத்திக்காக நாளாந்தம் 500 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதற்கமைய அனல் மின் மூலம் நாளாந்தம் 27 மில்லியன் அலகுகள் மின் உற்பத்தி செய்யப்படுவதாக சபையின் பிரதித் தலைவர அநுர விஜேபால தெரிவிக்கின்றார். நாட்டின் மொத்த  மின் உற்பத்தியில் இது 85 சதவீத பங்களிப்பை வழங்கின்றது.

இதேவேளை நீர்மின் உற்பத்தி  நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களில்  நீர்மட்டம் குறைவடைந்து காணப்படுவதாக சபையின் பிரதித் தலைவர் குறிப்பிட்டார்.

இதனால் நீர் மின் உற்பத்தி மூலம் 23 சதவீதமான மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply