இலங்கைப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
இலங்கைப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் நிறுவுனரம், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தின் அகதி முகாம்களில் வாழும் இலங்கை இடம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் அகதி முகாம்களில் 25 – 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் நன்மையானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பலருக்கு இந்தியா ஏற்கனவே இவ்வாறு குடியுரிமை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூடங்குளம் அனு மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் டாக்டர் அப்துல் காலாம் வகித்து வரும் நிலைபாட்டையே தாமும் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply