பெனிக்பாம் இடம்பெயர் முகாம் காணிகளை பெற்றுக் கொள்வதில் கடும் போட்டி
யுத்த காலத்தில் இடம்பெயர் மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா பெனிக்பாம் இடம்பெயர் முகாம் காணிகளை பெற்றுக் கொள்வதில் பலருக்கு இடையில் போட்டி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இடம்பெயர் மக்கள் மற்றும் இராணுவத்தினர் இவ்வாறு காணிகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆறாயிரம் ஏக்கர் பரப்பிலான குறித்த காணியை யாருக்கு வழங்குவது என்பது பற்றி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
200 ஏக்கர் காணியை வழங்குமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சீமெந்து நிறுவனம், தொல்பொருள் திணைக்களம், பெனிக்காம் முகாம் அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே வாழ்ந்து குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் காணிகளை கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply