தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு கோரி ஒஸ்லோவில் உண்ணாவிரதப் போராட்டம்
நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கிவருகின்ற சிறுவர் நல காப்பகத்திடமிருந்து தமது பிள்ளைகளை மீட்டுத்தருமாறு நோர்வே அரசாங்கத்தை வலியுறுத்திய சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டமொன்று நேற்று நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் ஆரம்பமாகியுள்ளது.
ஒஸ்லோவில் அமைந்துள்ள பிரம்மாண்டமானதும் முதற்றரமானதுமான டொம் என்ற கிறிஸ்தவ தேவாலத்திலேயே இந்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.15 மணியளவில் (நோர்வே நேரம் பி.ப 3.00) இந்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
சுமார் 12 ஆயிரம் சிறுவர்களை மேற்படி சிறுவர் காப்பகத்திடமிருந்து மீட்டுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வருட காலமாக தமது பிள்ளைகளை சிறுவர் காப்பகம் தடுத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ள போராட்டக்காரர்கள், நோர்வே அரசு இவ்விடயத்தில் உடனடியாக தலையீடு செய்து பிள்ளைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply