மரண தண்டனையை நீக்குமாறு கோரிக்கை

இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டுமென இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளுக்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு செய்துள்ள பரிந்துரைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென மேலும் வலிறுயுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ள போதிலும், விருப்பத்திற்குரிய இரண்டு பிரகடனங்கள் அமுல்படுத்தப்படவில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை அமுலாக்கம் ரத்து செய்யப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களுக்கு அமைவாக நாட்டின் மனித உரிமைச் சட்டங்கள் வலுப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply