இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து மன்மோகன் கருணாநிதிக்கு கடிதம்
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு குறித்து பிரதமர், தி.மு.க.தலைவர் கலைஞருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அதிகார பகிர்வு குறித்து கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி, தி.மு.க.தலைவர் கலைஞர், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக பிரதமர், கலைஞருக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்ற பின்னர் இலங்கை தமிழர்களி்ன் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்துகிறது. தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம்.
அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply