இலங்கையில் எந்தவொரு ஆயுதக் குழுவுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாது:சரத் பொன்சேகா
இலங்கையில் இனிமேல் எந்தவொரு ஆயுதக் குழுவும் எல்லைகளை நிர்ணயம் செய்துகொண்டு செயற்பட இடமளிக்கப் போவதில்லையென இராணுவத் தளபதி லெப்டி னன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதும் அதனை மீண்டும் தலையெடுக்க எவ் வகையிலும் அனுமதிக்கப் போவதில்லையெனவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற முன்பள்ளித் திறப்பு விழாவொன்றில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு இராணுவத் தளபதி உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் கூறியதாவது: “இராணுவத்தில் இணைந்துகொள்வோரின் தொகை முன்னரைவிட அதிகரித்துள்ளது.
மூன்று வருட ங்களுக்கு முன்னர் 116,000 ஆக இருந்த படையினரின் எண்ணிக்கை 180,000 ஆக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தத் தொகையை 10 முதல் 15 மடங்காக அதிகரிக்க எதிர்பார்க்கின்றோம்” என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply