திவிநெகும இன்று தென், சப்ரகமுவ, வட மத்திய சபைகளில் வாக்களிப்பிற்கு வருகிறது

திவிநெகும சட்ட மூலம் மத்திய மாகாணத்திலும் 19 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. சட்ட மூலத்திற்கு ஆதரவாக 36 வாக்குகளும், எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தது. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமுகமளித்திருக்கவில்லை. ஐ.தே.க. பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. இதில் எஸ்.சதாசிவம், எஸ். ராஜரட்ணம், முரளி ரகுநாதன் ஆகியோரும் எதிராகவே வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை நேற்று முழுமையான அங்கீகாரம் வழங்கியது. இந்த சட்ட மூலம் 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் ஐ.தே.க. குழுத் தலைவர் தயா கமகே ஆகியோர் கோரினர்.

இதன் பிரகாரம் வாக்கெடுப்பு இடம் பெற்றதோடு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் ஆளும் தரப்புடன் இணைந்து சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

திவிநெகும சட்ட மூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு மாகாண சபைகளின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதன்படி மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. தென், சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று (3) இது தொடர்பான விவாதம் நடைபெறுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply