இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவின் பயிற்சியே சிறந்தது
இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியாவில் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதே சிறந்தது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இந்திய ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை இராணுவ வீரர்கள் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பயிற்சி பெறுவதை விட இந்தியாவில் பயிற்சி பெறுவதே சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகம் சென்ற யாத்திரிகர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு அமைச்சர் இதன்போது கண்டனம் வெளியிட்டார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் நீண்ட நட்புறவு காணப்படுவதாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply