புலிகளின் சிறைக்கூடங்கள் உட்பட பாரிய முகாமொன்று கைப்புற்றப்பட்டுள்ளது

புலிகளின் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளடக்கிய பாரிய சித்திரவதை முகாமை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளனர்.விசுவமடுவுக்கு மேற்கு பிரதேசத்தில் உள்ள சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சித்திரவதை முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் கோட்பாடுகளை செவிமடுக்காதவர்களை கடுமையான விசாரணைக்குட்படுத்தி அவர்களுக்கு கடுமையாக சித்திரவதை செய்வதற்கு இந்த வதை முகாம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சிறைக் கூடங்கள் நாசியுக சிறைக் கூடங்களுக்கு ஒத்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

 புலிகளின் சித்திரவதை முகாம் அமைந்திருக்கும் வளாகத்தைச் சுற்றிலும் சுமார் பத்து அடி உயரத்திற்கு முற்களைக் கொண்ட சுருள் கம்பிகளால் வேலியிடப்பட்டுள்ளது. கொங்கிரீட் மற்றும் சீமெந்தினால் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமில் மிகவும் சிறிய பல சிறைக்கூடங்களை காணமுடிகிறது. இவை காற்றோட்டம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

சிறைகூடங்களுக்கு அண்மித்ததாக புலிகளின் தலைமைகளால் தண்டனை வழங்கப்படும் பாரிய மண்டபம் ஒன்றும் காணப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றி பல இரும்புக் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, புலிகள் இன்னுமொரு தண்டனை வழங்கும் உபாயமாக குட்டையானதும் நீளமானதுமான காற்றோட்டமில்லாத இரும்பு பெட்டியொன்றை வைத்துள்ளனர். கடுமையான தண்டனைக்குரியவர்களென தீர்மானிக்கப்படுவோர் அந்தப் பெட்டியினுள் இட்டு அடைத்து வைக்கப்படுவர். அதிலும் தண்டனை அதிகரிக்கும் பட்சத்தில் அப்பெட்டி ஜெனரேட்டரின் உதவியுடன் மேலும் சூடாக்கப்படுமெனவும் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழிகள், அதிசொகுசு வீடுகள், களஞ்சியங்கள், முகாம் தொகுதிகள் உள்ளிட்ட பல முக்கிய கட்டடத் தொகுதிகளை கைப்பற்றி வரும் படையினரது வெற்றிக்கு சித்திரவதை முகாம் கைப்பற்றப் பட்டுள்ளமை பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ள தெனவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply