இலங்கை விவாகாரம் தொடர்பாக அமெரிக்க,பிரித்தானிய வெளிவிவகாரச் செயலர்கள் அறிக்கை

இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபெண்ட் ஆகியோர் நேற்றுக்  கலந்துரையாடியுள்ளனர்.

இதன் பின்னர் இவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் இடம்பெறும் யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பபட்டுள்ள மக்கள் தொடர்பில் இரு நாடுகளினதும் வெளிவிவகாரச் செயலாளர்கள் கலந்துரையாடியதுடன் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு உடனடியாகக் காணப்படுவதுடன் அதற்குரிய தருணம் இதுவென நாம் கருதுகிறோம். ஆகவே இதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply