அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் – பொன்சேகா
தற்போதைய அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைப்பதற்கு மஹா சங்கத்தினர் மற்றும் தம்முடன் மக்கள் இணைந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பிக்குகள் முன்னணியில் ஹைட் மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை மாற்றுவதன் மூலம் மட்டும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளதாக சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply