விடுதலைப் புலிகளுடன் தொடர்புடயவரை நாடு கடத்த தீர்மானம்

கனடாவில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவித்து நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  குறித்த இலங்கையர் கடந்த 1998 ஆம் ஆண்டு கனடாவில் அகதி அந்தஸ்து பெற்றதன் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்.

அத்துடன் கனடாவில் இயங்கிவந்த உலக தமிழர் இயக்கத்திலும் அவர் பங்கேற்றிருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், கடந்த 2008 ஆம் ஆண்டு கனடாவில் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவர் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்பது உறுதியாகியுள்ளது.

எனவே, அவரை கனடாவில் இருந்து நாடுகடத்த வேண்டும் என்று குடிவரவுத் திணைக்கள பேச்சாளர் பெய்த் ஜோன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply